ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்: என்ன நடந்தது?

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (18:52 IST)
ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்: என்ன நடந்தது?
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் ஆன்லைனில் ரூ 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை ஆர்டர் செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது உலகம் முழுவதும் ஆன்லைனில் தான் அனைத்து பொருட்களும் பொதுமக்களால் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது என்பது ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் விரைவிலேயே வீடு தேடி வந்துவிடும் என்பதால் ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தன்னுடைய தாயின் மொபைல் போனை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரூ 1.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஆர்டர் செய்யப் பட்டது
 
 இதனையடுத்து அந்த ஆன்லைன் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் பின்னர் தவறுதலாக தனது இரண்டு வயது குழந்தை தனது செல்போனை நோண்டிக் கொண்டு இருந்தபோது அதை ஆர்டர் செய்ததாக பெற்றவர்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் கூறியதை அடுத்து அந்த பர்னிச்சர் பொருட்களை மீண்டும் ஆன்லைன் நிறுவனம் ரிட்டன் எடுத்துக் கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்