அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம்? – டாப் 10ல் கூட வராத ட்விட்டர்!

புதன், 23 நவம்பர் 2022 (15:48 IST)
மாதம்தோறும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ட்விட்டரின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதிலும் பேஸ்புக், ட்விட்டர் தொடங்கி இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ சமூக வலைதள செயலிகள் வரை பலரால் பல செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் வேர்ல்ட் ஆப் ஸ்டாட்டிக்ஸ் என்ற அமைப்பு மேற்கொண்ட சர்வேயில் அதிகமான கணக்குகள் இருந்தாலும் எந்த சமூக வலைதளம் மற்றும் செயலி மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ALSO READ: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் எட்டி உதைத்த நபர்… அதிர்ச்சியான படக்குழு… ஆனால் செந்திலின் பெருந்தன்மை!

அதன்படி மாதம்தோறும் அதிகமான பயனாளர்கள் பதிவிடும், பயன்படுத்தும் செயலியாக 2.9 பில்லியன் ஆக்டிவ் யூசர்களுடன் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. யூட்யூபை மாதம்தோறும் 2.2 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸப் செயலியை 2 பில்லியன் நபர்கள் மாதம்தோறும் பயன்படுத்துகின்றனர். ஆனால் வாட்ஸப் சுமார் 5 பில்லியன் மொபைல்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் வீ சாட், இன்ஸ்டாகிராம், டிக்டாக், டெலிகிராம், ஸ்னாப்சாட், பிண்ட்ரெஸ்ட், ரெட்டிட் ஆகிய செயலிகள் உள்ளன. கடைசியாக 11வது இடத்தில் 396 மில்லியன் ஆக்டிவ் யூசர்களுடன் ட்விட்டர் கடைசி இடத்தில் உள்ளது. சமீப காலமாக ட்விட்டரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளால் பலர் ட்விட்டர் உபயோகிப்பதை தவிர்த்துள்ளதும், ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்