துருக்கி, சிரியா பூகம்பம் அமெரிக்காவின் சதியா? வேகமாக பரவும் வதந்தி..!

சனி, 11 பிப்ரவரி 2023 (13:25 IST)
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அமெரிக்காவின் சதி என இணையதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 24000 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இந்த இரண்டு நாடுகளின் பூகம்பங்களுக்கு அமெரிக்காவின் சதி என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் அணு ஆயுத சோதனை காரணமாக தான் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 
 
அமெரிக்கா புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போர்க்கப்பலை செயல்படுத்தியதால் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆராயும் அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்