நான் அன்பானவன் இல்லை; அடங்காதவன்; அசராதவன்: ட்ரம்ப் எச்சரிக்கை

சனி, 4 பிப்ரவரி 2017 (15:43 IST)
ஐ.நா. சபையின் எதிர்ப்பை மீறி ஏவுகணை பரிசோதனை செய்ததால் ஈரான் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.


 

 
அண்மையில் ஈரான் நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் செயல்பட்டு இருப்பதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.
 
இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதார தடையை விதித்துள்ளார். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா போல் நான் அன்பானவன் இல்லை, ஈரான் அரசு நெருப்புடன் விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு ஈரான் அரசு ட்ரம்ப் நடவடிக்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
 
அரசியல் முன் அனுபவம் இல்லாத, எவ்வித பயனும் இல்லாத அமெரிக்க தலைமையின் அச்சுறுத்தலை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்