ஒற்றை டுவீட்டால் அமேசானை காலி செய்த டிரம்ப்

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:11 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்த ஒற்றை டுவீட் இ-காமர்ஸ் துறையின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த காரியத்தால் தனது வருவாயில் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசான் குறித்து டுவீட் செய்தார். 
 
அதில், அமேசான் நிறுவனம் வரி செலுத்தும் சிறு வியாபாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்கள், மாநகரங்கள் தொடர்ந்து இழப்பை சந்திப்பதோடு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று டுவீட் செய்திருந்தார்.
 
இந்த டுவீட் அமேசான் நிறுவத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் டுவீட் செய்த இரண்டு மணி நேரத்தில் அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.2% குறைந்தது. அதாவது 5.7 பில்லியன் டாலர் இழப்பு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்