கருத்து கணிப்பை பொய்யாக்கி அதிபரானார் டிரம்ப்!!

புதன், 9 நவம்பர் 2016 (13:25 IST)
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.


 
 
அமெரிக்காவின் 45வது அதிபராக டெனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எலக்டோரல் உறுப்பினர்களின் மொத்த வாக்குகள் 538 ஆகும். இதில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இதில் டிரம்ப் 276 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் பெற்றது குறிப்பிடதக்கது.
 
அரசியல் பிண்ணனி இல்லாமல், தனது பல சர்ச்சை கருத்துகள், பாலியல் புகார்கள், தனக்கு எதிராக வந்த கருத்து கணிப்பு ஆகியவற்றை மீறி டிரம்ப் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட 6 வாக்குகள் அதிகம் பெற்று அமெரிக்க அதிபராகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்