3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

புதன், 22 பிப்ரவரி 2017 (17:54 IST)
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலவாதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்ச இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப உத்தரவிட்டுள்ளார்.


 

 
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அண்மையில் 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் குடியேறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்தது.
 
இதையடுத்து தற்போது முறையான ஆவணங்கள் இன்றி விசா காலவாதியான அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உரிய வீசா இன்றி 1 கோடி தங்கியிருப்பதாக கூறப்ப்டுகிறது. இதில் 3 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. தற்போது அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்