இந்தியா–பாகிஸ்தான் போர் நடந்தால், இரு நாட்டின் வணிகத்தை நிறுத்திவிடுவேன் என்று கூறினேன். உடனே இரு நாடுகளும் சமாதானமாகி, போரை நிறுத்திவிட்டார்கள் என ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தற்போது மீண்டும், "என் தலையிட்டால்தான் இந்தியா–பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது" என்று அவர் பேசியிருப்பது, சர்ச்சைக்குரிய வகையில் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், "இந்தியா–பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த, வர்த்தகத்தை பெரும் அளவில் பயன்படுத்தினேன்" என்று டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய தலையிட்டால்தான் இந்தியா–பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. வணிகம் குறித்த ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என்று அழைத்தேன். உடனே அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தகத்தை முன்னெடுத்து போரை நிறுத்தியதாக, சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் டிரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா இதனை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.