உலக கொரோனா பலி: 24 மணி நேரத்தில் 6,174 என்பதால் பரபரப்பு

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (07:42 IST)
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தமாக 6,174 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா காரணமாக 21,062,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 264,935 கேஸ்கள் பதிவாகி உள்ளது என்றும், 752,580 பேர் கொரோனா காரணமாக இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதுவரை உலகம் முழுக்க 13,894,466 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், உலகம் முழுக்க தற்போது 6,415,425 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர் என்றும், 64,692 பேர் உலகம் முழுக்க மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள் உள்ளதாகவும், இந்தியாவில் மொத்தமாக 2459613 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 660348 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும், 54776 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தமாக இதுவரை 1750636 பேர்  இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 1006 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 24 மணி நேரத்தில் இத்தனை பலியாவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்றும், இந்தியாவில் மொத்தமாக 48144 பேர் பலியாகி உள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்