இன்று அபூர்வ சூரிய கிரகணம்.. ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்ததால் மக்கள் அதிருப்தி..!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:24 IST)
400 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்ததை அடுத்து மேகமூட்டம் காரணமாக ஒரே ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்ததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள வடமேற்கு கடற்கரை பகுதியான எக்ஸ்மவுத் என்ற நகரில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்பதால் இந்த நகருக்கு உலகெங்கிலும் இருந்து பல வானியல் நிபுணர்கள் குவிந்திருந்தனர்.
 
இந்த நிலையில் இன்று கிரகணம் தொடங்கிய நிலையில் திடீரென மேகமூட்டம் காரணமாக சரியாக பார்க்க முடியவில்லை என்றும் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இது நம்ப முடியாத வகையில் இருந்தது என்றும் மிகவும் பிரகாசமாகவும் அற்புதமாகவும் தெளிவாகவும் சூரிய கிரகணம் தெரிந்தது என்றும் ஆனால் ஒரே ஒரு நிமிடத்தில் மட்டும் முழு கிரகணத்தை பார்க்க முடிந்தது  என்றும் இந்த சூரிய கிரகணத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்