செல்போன் பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்!

செவ்வாய், 25 ஜூலை 2023 (17:33 IST)
பிரேசில் நாட்டில் தன் செல்போனை பறித்த திருடனிடம் தன் திருடனிடம்  தன் மனதைப் பறிகொடுத்துள்ளார் ஒரு இளம்பெண்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுவேல் என்ற இளம்பெண். இவர்.  சமீபத்தில் வெளியில் செல்லும்போது, தன் கையில் செல்போனுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று அவரது செல்போனை பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓடியுள்ளார். அவர் திருடன் என்று கத்திக் கதறியுள்ளார். ஆனால், யாருமில்லை என தெரிகிறது.

பின்னர், சிறிது நேரம் கழித்து செல்போன் பறித்துக் கொண்டு ஓடிய திருடன் அந்த செல்போனில் உள்ள அப்பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று நினைத்து மீண்டும் அவரிடம் வந்து திருடியதற்கு மன்னிப்பு கேட்டு, செல்போனை அவரிடமே கொடுத்துள்ளார்.

இதில், திருடனிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டார் அப்பெண். இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர் என சமீபத்தில் இருவரும் ஜோடியாக பேட்டியளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்