விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

Prasanth Karthick

திங்கள், 17 ஜூன் 2024 (09:41 IST)

மலாவியில் துணை அதிபர் சோலாஸ் சிலிமா விமான விபத்தில் பலியான நிலையில் அவரது இறுதி ஊர்வல வாகனமும் விபத்தில் சிக்கியுள்ளது.

 

Saulos Chilima

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபராக பதவி வகித்து வந்தவர் சோலாஸ் சிலிமா. சமீபத்தில் இவர் பயணித்த விமானம் கோர விபத்துக்கு உள்ளான நிலையில் அவரும் அவரோடு பயணித்தவர்களும் பலியானார்கள். சோலோஸ் சிலிமாவின் உடல் தலைநகரத்திற்கு கொண்டு வரப்பட்டு மரியாதை செய்யப்பட்டபின் அவரது சொந்த கிராமமான சைப்க்கு கான்வாய் வாகனங்கள் சூழ கொண்டு செல்லப்பட்டது.

சோலோஸ் சிலிமாவின் இறுதி ஊர்வலத்தை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அதில் பலர் கான்வாய் வாகனங்களை மறித்து சோலோஸ் உடலை பார்க்க வேண்டுமென போராட்டம் செய்ததும் நடந்துள்ளது. சில இடங்களில் கான்வாய் வாகனங்களுக்கு குறுக்கே சிலர் புகுந்ததால் வாகனம் மோதி பலர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேர் பலியான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edit by Prasanth.K

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்