ஹவுதி அமைப்பை மீண்டும் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா!

Sinoj

வியாழன், 18 ஜனவரி 2024 (13:13 IST)
ஹவுதி அமைப்பை மீண்டும் தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல்கள்  சென்று கொண்டிருக்கும்போது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த கப்பல்களுக்கு அச்சம் தரும் வகையில் இருப்பதாக கூறி, சமீபத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, ஏமன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கும் இடங்களிலும் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  ஹவுதி அமைப்பின் முக்கிய   நபர் ஒருவர் '’அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் நடத்தப்பட்ட  தாக்குதல் நியாயமின்றி நடந்துள்ளது. அமெரிக்காவும், பிரிட்டானும் இதற்கு அதிக விலை கொடுக்க தயாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார். எனவே போர் மூள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க நாடு, ஹவுதி அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாவது:

ஹவுதி அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

மேலும், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஹவுதி அமைப்பினர் தாக்குதல்களை நிறுத்தினால், அமெரிக்கா இம்முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்  ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்