கனடா பிரதமருக்கு மீண்டும் கொரொனா தொற்று உறுதி

செவ்வாய், 14 ஜூன் 2022 (18:45 IST)
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் மீண்டும் கொரொனா தொற்று 4 அது அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் பல நாடுகள் முனனேச்சரிக்கை  நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  எனக்கு கொரொனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுகாதார வழிக்காடுல்களை பின்பற்றி வருகிறேன்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் கனடா பிரதமருக்கு முதல் முறையாக கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், இரண்டாவது முறையாகக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்