சூப்பர்மேன் தொடர்கதையின் முதல் கதாநாயகியாக நடித்த நோயல் நீல் (95) மரணமடைந்தார். சில ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டிருந்த நோயல், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டஸ்கானில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
பின்னர், 1940-ல் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலை காட்டி வந்த நோயல்லின் திறமையை கண்டு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் 1948ல் சூப்பர்மேன் திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தது. இந்தப் படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் கிரிக் அலினும், அவரது தோழியாக வரும் லேன் கதாபாத்திரத்தில் நோயல் நீலும் நடித்தனர்.