மேலாடைகளின்றி ஓடிய ஆண்கள்- பார்த்து வியந்த சுற்றுலா பயணிகள்

திங்கள், 11 டிசம்பர் 2023 (17:34 IST)
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஆண்கள்  மேலாடையின்றி  பாட்டுப்பாடிய ஓடியதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.

ஹங்கேரி நாட்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக வித்தியாசமான ஓட்டயப் பந்தயப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற  நிறைய ஆண்கள்  மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில் வெறும் கால்சட்டையும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியும் அணிந்து பாட்டுப் பாடியபடி அவர்கள் ஓடியதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.

இந்த ஓட்டயம் பந்தயம் மூலம் கிடைத்த நிதியை  ஹங்கேரி நாட்டு தொண்டு நிறுவனத்திடம் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழங்கினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்