திருமணம் செய்வதற்காக பெண்களை கடத்தி செல்லும் தாலிபான்கள்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (07:22 IST)
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தாலிபான்களின் அட்டகாசம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தாலிபான்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று பெண்களை கடத்தி செல்வதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து முன்னணி பத்திரிக்கை ஒன்றின் பெண் செய்தியாளர் எழுதிய கட்டுரையில் தாலிபான்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக இருக்கிறது என்றும் காபூல் நகர் வீழ்ச்சியடைந்த பின்னர் வீடு வீடாக சென்று 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாலிபான்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டிருப்பதாக எழுதியுள்ளார்.
 
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தாலிபான்களின் கொட்டத்தை அடக்க மீண்டும் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்