காபூலையும் கைப்பற்றியதா தாலிபான் படை? ஆப்கானிஸ்தானில் பரபரப்பு

ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (15:01 IST)
காபூலையும் கைப்பற்றியதா தாலிபான் படை? ஆப்கானிஸ்தானில் பரபரப்பு
கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் உள்ள பல நகரங்கள் தாலிபான்களின் கைவசம் சென்று கொண்டிருப்பதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தான் அரசு தாலிபான்களை கட்டுப்படுத்த முயன்றாலும் தாலிபான்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாகவும் முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகரில் தாலிபான் தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஊழியர்கள் பலர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கதி என்ன என்று தெரியவில்லை என்றும் அங்குள்ள பத்திரிகைகளில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. காபூல் நகரமும் தாலிபான்களின் கைவசம் ஆனால் ஆப்காணிஸ்தான் நாடே தாலிபான்களின் கைவசம் ஆகிவிடும் என்பது என்று கூறப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்