ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான தலீபான் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதும், அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் தலீபான்களுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானத்தை நிறுவ முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலீபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்துள்ள செய்தியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதை கருத்தில் கொண்டு எதிரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களை 3 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.