இந்த கட்டடத்தின் 35-வது மாடியில் இருந்து ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. மூன்று மணி நேரமாக தீ பற்றி எரிவதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.