பாகிஸ்தானில் அடுத்தடுத்து விபத்துகள்! 37 பேர் பரிதாப பலி!

Prasanth Karthick

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (15:10 IST)

பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 37 பேர் பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள லாஸ்பெலா மாவட்டத்தில் மலைப்பாதையில் ஈரானை சேர்ந்த 70 பக்தர்களுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

 

உடனடியாக மீட்பு குழுவினர் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 

இதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 26 பேர் பரிதாப பலியானார்கள். தொடர்ந்து நடந்த இந்த விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்