பரபரப்பான சாலையில் இரண்டு சக்கரங்களில் கார் ஓட்டி ஸ்டண்ட்!! வைரல் வீடியோ

புதன், 1 மார்ச் 2017 (13:29 IST)
துபாய் தலைநகர் ஷார்ஜாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் ஸ்டண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.


 
 
தன்து ஸ்டண்ட்ங் திறமையை பறைசாற்றிட திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்து, தனது காரை இரண்டு சக்கரங்களிலேயே சிறிது தூரம் ஓட்டிச் சென்றுள்ளார்.
 
வாலிபரின் இந்த சாகசத்தை படம்பிடித்த உறவினர், அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவியுள்ளது. 
 
ஆனால் இதில் ஒரு திருப்பம் என்னவெனில், காவல்துறையின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றது. பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்