அடுத்தடுத்த சில நிமிடங்களில் இந்தோனேஷியா, இந்தியாவில் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

திங்கள், 29 மே 2017 (23:19 IST)
இந்தோனேஷியாவில் இன்று இரவு சுமார் 10.30 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.





ரிக்டர் அளவில் 6.6 என்று பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் கடுமையாகக் குலுங்கியதாகவும் இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை

இந்தோனேஷியாவை அடுத்து சில நிமிடங்களில் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் இந்த இரு பகுதிகளிலும் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்