இந்த விவகாரத்தில் ஸ்டோர்மி டேனியஸ்ல் வாயை மூடுவதற்காக 1.50 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரச்சார நிதியிலிருந்து அளித்திருக்கிறார் ட்ரம்ப். இந்த குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் ட்ரம்ப் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே ட்ரம்ப் சரணடைய திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு மிரட்டல் விடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஸ்டோர்மி டேனியல்ஸ் “டொனால்ட் ட்ரம்ப்பை பார்த்து எனக்கு பயமில்லை. அவரை நிர்வாணமாக பார்த்தவள் நான். அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது. ட்ரம்ப் ஏற்கனவே பல கலவரங்களை ஏற்படுத்தியவர். அவர் கைது செய்யப்பட்டால் அது வன்முறையை கண்டிப்பாக ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.