ஈபிஎஸ்-ஐ விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும்: அமைச்சருக்கு கேபி முனுசாமி எச்சரிக்கை

வெள்ளி, 31 மார்ச் 2023 (14:01 IST)
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு அதிமுகவின் கேபி முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டி காட்டிய போது அவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக தெரிகிறது. 
 
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கூறிய போது ’எதிர்க்கட்சித் தலைவர் விழுப்புரத்தில் நடந்த கொலை சுட்டிக்காட்டிய போது மக்கள் நல்வாழ்வுத்துறை கடுமையாக விமர்சனது உள்ளார். இது கண்டனத்துக்குரியது.
 
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியம் விமர்சனம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியவரும். ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவது தான் எங்கள் வேலை, யோக்கியமாக இருந்ததால் தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார்’ என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்