ஸ்டோன் ஹெஞ்ச்: இங்கிலாந்தின் விளக்கப்படாத மர்மம்....

வியாழன், 6 ஜூலை 2017 (11:17 IST)
இங்கிலாந்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்று வரை விளக்க முடியாத பல மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது.  


 
 
இந்த ஸ்டோன் ஹெஞ்ச் யாரால் கட்டப்பட்டது, ஏதற்கு கட்டப்பட்டது என்பது தான் பெரிய மர்மமாகவே உள்ளது. இன்னும் சிலர் இது தானாகவே உருவாலியிருக்குமோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
 
ஸ்டோன் ஹெஞ்சில் உள்ள ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
 
இந்த கற்கள் அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் வரலாறுகள் கூறுகின்றன. 
 
இந்த ஸ்டோன் ஹெஞ்சை கட்டி முடிக்க மொத்தம் 160 கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தனை எடை கொண்ட கற்களை மலைப் பிரதேசங்களில் இருந்து எவ்வாறு எடுத்துவரப்பட்டிருக்கும், இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைப்பின் பின்னணி என்ன இது எதற்காக பயன்படுத்தபட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்