குண்டு வெடிப்பில் அரசுக்கு தொடர்பா? இலங்கை அமைச்சரின் சகோதரர் கைது

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (16:31 IST)
இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்டு அந்நாட்டு அமைச்சரின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.  
 
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
 
தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஹஸிம் இளைஞர்களை மனித வெடிகுண்டாக மாற்ற மூளைச்சலவை செய்து பலரை அவர் வசம் வைத்துள்ளார் போன்ர தகவல்கள் வெளியானது. இதனால், அவர் தேடப்பட்டு வந்தார்.  
இந்நிலையில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன காலையில் தகவலை வெளியிட்டார். 
 
அதனை தொடர்ந்து இப்போது, இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் சகோதரை போலீஸார் விசாரித்து வரும் நிலையில் இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்