இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் கோத்தபய உத்தரவு

திங்கள், 2 மார்ச் 2020 (22:10 IST)
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே இலங்கை முழுவதும் செய்திகள் வெளியாகிய நிலையில் சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு உத்தரவில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே கையெழுத்திட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே தற்போது அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாடாளுமன்றத்தை கலைக்க, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிய வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க, எதிர்க்கட்சிகள் ஆதரவை அளிக்கவில்லை என்பதால் இன்றுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால் சட்டப்படி இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்