பொருளாதாரம் வீழ்ச்சி; உணவுக்கு தட்டுப்பாடு! – இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

புதன், 1 செப்டம்பர் 2021 (10:33 IST)
இலங்கையில் அன்னிய செலவானி வீழ்ச்சி காரணமாக உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2020ம் ஆண்டில் 3.6 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நிகழ்வுகளால் அன்னிய செலவாணி பாதிப்பால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதில் இலங்கை சிக்கலை சந்தித்துள்ளது.

இதனால் உள்நாட்டில் உணவு பொருட்கள் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல் ஆகியவையும் அதிகரித்துள்ளன. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இலங்கையில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்