போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம்: பதட்டத்தில் இலங்கை!
சனி, 9 ஜூலை 2022 (16:20 IST)
போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம்: பதட்டத்தில் இலங்கை!
இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பதும் அந்த போராட்டம் கடந்த சில நாட்களாக உச்ச கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் தெரிந்ததே
குறிப்பாக இன்று காலை அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இதுவரை ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்களுடன் ராணுவமும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது
ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு போராட்டங்களுடன் கைகோர்த்த புகைப்படங்கள் இலங்கை ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன
இந்த நிலையில் இலங்கையில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது