இலங்கையில் ஊரடங்கு உத்தரவு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிரடி

ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (15:37 IST)
இலங்கையில் இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கிய தொடர் வெடிகுண்டு சம்பவம் சற்றுமுன் வரை நீடித்துள்ளது. இதுவரை மொத்தம் எட்டு இடங்களில் வெடித்துள்ள குண்டுவெடிப்பு சம்பவத்தால் அந்நாட்டு மக்கள் பதட்டத்தில் உள்ளனர். அடுத்து எந்த இடத்தில் குண்டுவெடிக்குமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் இலங்கை மக்கள் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
மேலும் இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும், குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பது பற்றி துரித விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் - இலங்கை அதிபர் அலுவலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்