அமெரிக்க போலீஸார் அணில் ஒன்றை கைது செய்துள்ள சம்பவம் கேலிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றது.
அதில் சீ கிர்ட் என்ற பகுதியில் மிகவும் பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த கிறிஸ்துமச் மரங்களில் வண்ண விளக்குகள், பரிசு பொருட்கள் என அளங்கரிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் அங்கு இருந்த அணில் ஒன்று கிறிஸ்துமஸ் மரத்தில் இருந்த விளக்குகள் அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் மரத்தில் பல விளக்குகள் எரியாமல் போய் இருக்கிறது.
அணிலை தேடி வந்த போலீஸார் அதனை கைது செய்தனர். இது குறித்து பேஸ்புக்கில் பெருமையாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த அணில் பெயிலில் விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.