ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயரும் இந்திய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக செனட்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் இந்திய மக்கள் பலர் பல்வேறு பணிகளுக்காக பயணிக்கும் நிலையில் அனுமதிக்கும் நாடுகளில் குடியேறவும் செய்கின்றனர். அவ்வாறாக ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பலர் குடியேறியுள்ளனர். இந்நிலையில் இந்திய மக்கள் குடியேற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய பெண் செனட்டர் ஜெசிந்த ப்ரைஸ், இந்தியாவிலிருந்து ஏராளமானோரை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிப்பதன் மூலம் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியும், பிரதமர் அல்பானிஸும் தங்களுக்கு ஆதரவான சமூக ஓட்டுகளை அதிகரிக்கின்றனர் என்றும், நாட்டின் வேலைவாய்ப்பு, வாழும் தரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு அவரது சொந்த கட்சியான வலதுசாரி கட்சியை சார்ந்தவர்களே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். செனட்டர் ப்ரைஸ் தவறான நோக்கத்தில் அப்படி பேசவில்லை என்றாலும் கூட இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Edit by Prasanth.K