மொட்டை மாடியில் நிர்வாணமாக கிடந்த தாய்: பதறிய எதிர்வீட்டு பெண்; அசராத மகன்!

திங்கள், 24 ஜூன் 2019 (16:48 IST)
துபாயில் மனைவியுடன் சேர்ந்து தாயை கொடுமைப்படுத்தி கொன்ற மகனை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
இந்தியாவில் இருந்து தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க துபாய் சென்ற தாயை இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். கொடுமைகளின் உச்சகட்டமாக நிர்வாணமான மொட்டை மாடியில் அந்த மகனின் தாய் இருந்துள்ளார். 
 
இதை கண்டு பதறிப்போன எதிர்வீட்டு பெண் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். தாயை ஆம்புலன்ஸில் ஏற்றகூட மகன் உதவி செய்யவில்லை. ஒருவழியாக மருத்துவனமைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அந்த தாயின் கருவிழிகள் சிதைக்கப்பட்டு இருந்ததாகவும், உடல் முழுவதும் தீக்காயங்கள்,  உடலின் பல பாகங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
 
இதை அப்படியே விடக்கூடாது என நினைத்த எதிர்வீட்டு பெண் இது குறித்து போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் அந்த தாயின் மகன் மற்றும் மருமகளை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
பெற்ற தாய்க்கு மனைவியுடன் சேர்ந்துக்கொண்டு இரக்கமற்ற முறையில் கொடுமைகளை இழைத்த அந்த மகனின் செயலால் அந்த குடியிருப்பு பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்