மனித நடமாட்டம் குறைந்த அண்டார்டிகாவில் மட்டும் சூரிய கிரகணம் தெரியும் என்பதால் வானியல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும். இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் ஒரு நிமிடம் 54 நொடிகள் இருளை உருவாக்கும்.