தேள் பொறியல்.. வெட்டுக்கிளி கூட்டு! பூச்சிகளை விரும்பி சாப்பிடும் இளைஞர்கள்! சிங்கப்பூர் அரசு எடுத்த முடிவு!

Prasanth Karthick

செவ்வாய், 9 ஜூலை 2024 (08:54 IST)

பல்வேறு உலக நாடுகளிலும் அசைவ உணவாக பல்வேறு உணவுகளை எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஈசல் பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. சீனாவில் பெரும்பாலான உயிரினங்களை, பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் சிங்கப்பூரிலும் பூச்சி உணவுகள் மீதான மோகம் அதிகரித்துள்ளதாம். சமீப காலத்தில் சிங்கப்பூரில் விதவிதமான பூச்சிகளை கொண்டு தயார் செய்யப்படும் அசைவ உணவுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். முக்கியமாக இளைஞர்கள்தான் இந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களாம்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வெட்டுக்கிளி, பட்டுப்புழு உள்ளிட்ட 16 வகை பூச்சியினங்களை மனிதர்கள் சாப்பிடுவதற்கு அந்நாட்டு உணவுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த பூச்சிகளை சீனா, தாய்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்