சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கெடுபிடி செய்ததால், இந்திய ஐடி ஊழியர்கள் பலர் அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். புதிய இந்திய ஐடி ஊழியர்களும் அமெரிக்காவுக்கு செல்வது குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் உங்களுடைய நிறுவனங்களில் பணி புரிவதற்கு சிங்கப்பூர் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை இன்போசிஸ், விப்ரோ, காக்னிசான்ட், எல் அண்ட் டி இன்போடெக் போன்ற நிறுவனங்களுக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.