உலகின் பல்வேறு நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்

புதன், 21 மார்ச் 2018 (11:37 IST)
அண்டார்டிகாவில் உள்ள ராட்சத பனிப்பாறையான ராட்டன் உருக தொடங்கிவிட்டதால்,  கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயர்ந்து பல்வேறு நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் மிதக்கின்றன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக மெல்ல மெல்ல உருகி வருகின்றன. அந்த வகையில் ராட்சத பனிப்பாறையான ‘ராட்டன்’ என்ற பனிப்பாறை பருவநிலை மாற்றத்தால் மெல்ல உருகி வருகிறது.
 
இந்நிலையில் நாசா ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் ராட்சத பனிப்பாறை உருகுவதால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி வரை உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பல்வேறு நாடுகள், கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்