நிம்மேள் இந்தியால விவசாயத்துல முதலீடு பண்றான்! – சவுதி இளவரசரின் 100 பில்லியன் முதலீடு!

திங்கள், 21 டிசம்பர் 2020 (09:37 IST)
சவுதி இளவரசர் இந்தியாவில் விவசாயம், பொருள் உற்பத்தி ஆகியவற்றில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இந்தியாவுடன் சிறப்பான நட்புறவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய போவதாக கூறியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

உலக அளவில் அதிகமான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவுதி பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ரசாயன தயாரிப்புக்கு இந்தியாவின் பங்களிப்பையே நம்பி உள்ளது. இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமல்லாமல் கட்டுமானம், வாடிக்கையாளர் பொருள் உற்பத்தி, விவசாயம் போன்ற துறைகளிலும் தான் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்