உக்ரைன் சர்வர்களை முடக்கும் ரஷ்யா..! – அதிகரிக்கும் பரபரப்பு!

புதன், 16 பிப்ரவரி 2022 (12:05 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைன் சர்வர்கள் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தற்போது உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின் இணையதளம் முடங்கியுள்ளது. இவற்றை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. சைபர் க்ரைம் தாக்குதலால் உக்ரைனின் பிரைவாட்24 வங்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்