உக்ரைன் ராணுவத்திற்கு 10 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி செய்த ரஷ்ய நடிகை!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:27 IST)
உக்ரைன் ராணுவத்திற்கு 10 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி செய்த ரஷ்ய நடிகை!
ராணுவத்திற்கு பத்தாயிரம் டாலர் நிதி உதவி செய்வதாக பிரபல ரஷ்ய நடிகை ஒருவர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
உக்ரைன் நாட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு ரஷ்ய நாட்டின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் ரஷ்ய நாட்டின் அரசுக்கு அவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு பிரபல நடிகை லியா என்பவர் 10 ஆயிரம் டாலர்கள் நிதி உதவி வழங்கி தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் .
 
மேலும் ரஷ்ய பொதுமக்களும் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் நடிகை லியா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் போரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு உக்ரைன் மக்களிடம் தனது மன்னிப்பையும் கோரினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்