வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7200: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:18 IST)
வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 7200 ரூபாய் உதவித்தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாதவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 600 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 
 
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குடும்ப வருமானம் 72 ஆயிரத்து மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் ஆதி திராவிட பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மற்றும் 45 வயது வரை இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்