அமெரிக்கா உளவு பிரிவில் ரோபோக்கள்!

செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:12 IST)
அமெரிக்க உளவு பிரிவு சிஐஏவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.

 
செயற்கை நுண்ணறிவு தொலிழ்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்களை அமெரிக்க உளவு பிரிவான சிஐஏ பயன்படுத்த உள்ளது. தொலிழ்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்டாமாக கருத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போது எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரோபோக்கள் பயன்பாடு ஆரம்பமாகிவிட்டது.
 
சிங்கப்பூரில் சில பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சிஐஏ கண்காணிப்பு பணிகளில் மனிதர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். தற்போது ரோபோக்கள் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.
 
முதற்கட்டமாக சிறிய ரக உளவு வேலைகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரோபோக்களை உருவாக்கும் பணியில் தற்போது சிஐஏ களமிறங்கியுள்ளது. ரோபோக்கள் மனிதர்களை விட வேகமாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் சிஐஏவின் பாதுகாப்பு துறை மிகவும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்