இந்தியர்களுக்கு 10 லட்சம் விசா.. அமெரிக்காவின் தாராளம்..!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:35 IST)
அமெரிக்கா செல்லும் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் விசா பெறுபவர்களில் 10% பங்கு இந்தியர்கள் தான் வகிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்கா செல்வதற்காக பெறப்படும் அனைத்து வகை விசாக்களில் இந்தியர்கள்  10 சதவீதத்தை பெற்றுள்ளதாகவும், இதில் 20 சதவீதம் மாணவர் விசாக்கள், 65 சதவீதம் அமெரிக்காவில் தற்காலிகமாக பணி புரிபவர்கள் என்று தெரிகிறது.
 
இந்தியாவில் விசா வழங்கப்படுவதை துரிதப்படுத்தும் வகையில் விசா அலுவலகத்தில் ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக   சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் ஊழியர்கள், மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்