மீண்டும் மோடி பிரதமராக 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு.. அமெரிக்க நிறுவனத்தின் கணிப்பில் தகவல்..!
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:19 IST)
மீண்டும் மோடி பிரதமராக எண்பது சதவீத இந்தியர்கள் ஆதரவு அளித்துள்ளதாக அமெரிக்க நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல தனியார் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 'பியு ரிசர்ச் சென்டர்' என்ற அமைப்பு இந்தியாவில் நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி பிரதமராக 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் எடுத்த கருத்துக்கணிப்பில் 24 நாடுகளில் மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமானவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோடியின் உலகளாவிய பார்வைம் இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்கான முயற்சி ஆகியவை தான் அவருக்கு அதிகமான ஆதரவு வருவதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.