இந்தோனேஷிய பெண்ணை விழுங்கிய 23அடி மலைப்பாம்பு

சனி, 16 ஜூன் 2018 (15:25 IST)
மாயமான இந்தோனேஷிய பெண்ணின் சடலம் 23அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
இந்தோனேஷியா முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்த வா திபா(54) என்ற பெண் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அந்த கிரமத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. 
 
வா திபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 23 அடிக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் உருண்டு வந்துள்ளது. 
 
சந்தேகம் அடைந்த கிராம மக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் உடல் இருந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணின் சடலத்தை கிராம மக்கள் மீட்டனர். மேலும், வா திபாவின் தோட்டத்தில் பாம்புகள் நடமாட்டம் சர்வசாதாரணமானது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்