இந்தோனேசியா பெட்ரோல் கிணற்றில் தீ விபத்து: 15 பேர் பலி

புதன், 25 ஏப்ரல் 2018 (17:19 IST)
இந்தோனேசியாவில் உள்ள ஒரு பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர்.
 
அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் திருட்டுத்தனமாக பெட்ரோல் திருட இன்று அதிகாலை பலர் முகாமிட்டுள்ளனர். 
 
அப்போது திடீரென பெட்ரோல் கிணறு வெடித்துள்ளது. இதனால் மீகப்பெரிய அளவில் தீ கொளுந்து விட்டு ஏறிந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்