பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இம்ரான் கான், நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.
இந்நிலையில் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் பிரதமரின் 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், 4 லேண்ட் குரூசர் வாகனங்கள் ஆகியவை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு அந்த தொகை அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.