2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இதற்கான தடுப்புப் பணிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு சுமார் 0.3 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.