சாலையில் தரையிறங்கிய விமானம் மரத்தில் மோதி நொறுங்கியது - வைரல் வீடியோ

செவ்வாய், 21 நவம்பர் 2017 (12:22 IST)
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக சாலையில் தரையிறங்கிய சிறிய விமானம் மரத்தில் மோதி நொறுங்கியது.


 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒரு பயணியுடன் பறந்தது. விமானம் தரையிறங்கும் பகுதியின் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இடது இயற்கையில் கோளாறு ஏற்பட்டது.
 
அதனால் விமானத்தை பாதியிலே தரையிறக்க முயற்சி செய்தனர். விமானியின் கட்டுபாட்டை மீறி விமானம் கீழே இறங்கியது. நெடுஞ்சாலையில் தாழ்வாக பறந்த விமானம் சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி நொறுங்கியது. 
 
ஆனால் விமானி மற்றும் பயணிக்கு காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் அவர்களை மீட்டனர். மேலும் விமானம் சாலையில் தாழ்வாக பறந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
 
தற்போது விமானம் சாலையில் விழுந்து நொறுங்கிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Pinellas Sheriff

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்